பொறுமை இழந்து உன்னை கடிந்து கொண்டாலும்
பொக்கை வாய் கொண்டு புன்முருவலிட்டாய்
குழல் இனிது யாழ் இனிது என்றேன்
உன் குரலில் ‘ங்க’ கேட்கும் வரை.
உன் ‘ங்க’ கேட்டு உன்னுடன் உரையாட எண்ணி
உன்னைப்போல் நானும் ‘ங்க’ எனும்போது
உன் தந்தை "ஏதோ கழுதை" என்று நகைக்க
பாட்டனார் உன்னை "சின்னக் கழுதை" என்றது சரிதான் போலும்.
குளிர் காற்றில் நீ குல்லா போட மறுத்து அடம் பிடிக்க
உனக்கு ஜலதோஷம் பிடிக்குமோ என்று மனம் படபடக்கிறது
நான் ஹாச்சூ என்றதும்
என் தாய் என்னை குல்லா போட சொல்லி வற்புறுத்தியதும்
நான் அடம் பிடித்ததையும் என் தாய் படபடத்ததையும் நினைவுட்டிகிறது
தாய்மை உணர்வை என்னவென்று சொல்ல
No comments:
Post a Comment