Friday, September 23, 2011

விளையாட்டு

விரும்பி சென்றால் விலகிப் போகும்
விலகி சென்றால் விரும்பி வரும்
நீ விரும்பி வர வேண்டி
விலகி செல்லும் நிலையில் நான்

விலகும் போதெலாம் மனது வலிக்க
நீ விரும்பி வருவது மருந்தாகிப் போகிறது

விலகி சென்று உன்னை விரும்பி வரவைக்கும்
இந்த விளையாட்டு அவசியம் தானோ?